கீழேயுள்ள எண்ணங்கள் உங்களுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளீர்களா? என் மனதில் ஒரு சம்பவத்தை மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன் (பெரும்பாலும் இனிமையற்ற விஷயங்களை). எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை திறமையாக கையாளுவதைப் பற்றி எந்நேரமும் நான் சிந்தித்துக் கொண்டிருப்பேன். எனது மகிழ்ச்சிக்கு அங்கீகாரம் அல்லது ஒப்புதல் தேவை. நான் விரும்புவது போல் நடக்காவிட்டால் வருத்தப்பட்டு, மற்றவர்களை குறை கூறுகிறேன் குறிப்பிட்ட ஒரு வழியில் ஒருவர் செயல்படும் போது மட்டுமே நான் என்னைப் பற்றி நல்லதாக உணர்கிறேன். எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கருத்து உள்ளது, நான் இவ்வாறு என்று என்னைப்பற்றிய ஒரு எண்ணச்சித்திரம் உள்ளது, மற்றும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி செல்லவில்லை என்றால், ஒவ்வொரு முறையும் நான் மனம் நொந்து போகிறேன். இந்த எண்ணங்களில் சிலவற்றை நாம் பல வகையான தீவிரத்தின் அளவுகளுடன் தொடர்புபடுத்த முடியும். பெரும்பாலும் இடைவிடாத எதிர்மறை எண்ணங்களானது, நம் மனதில் இருப்பதை விட பலமடங்கு பெரிதாக பிரச்சனைகளை உருவாக்கி, நம் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் இழக்கச் செய்கிறது. இத்தகைய எதிர்மறை எண்ணங்களுடன் போராடும் போது, மன உறுதியினைக் காட்டிலும் வேறு பயனுள்ள வழி இருக்கிறதா என்று நாம் யோசிக்கத் தொடங்குகிறோம். பல ஊக்கமளிக்கும் பேச்சாளர்கள் மற்றும் சுய உதவி வழிகாட்டிகள், நேர்மறையான சிந்தனையை தேர்வு செய்யலாம் எனக் கூறினாலும் அதை செயல்படுத்துவது அவ்வளவு எளிதன்று. தங்களை மாற்றிக் கொள்ளும் ஒரு நபரின் திறனை மையமாகக் கொண்டு (எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் சார்ந்தது), உளவியலாளர்கள் எதிர்மறை சிந்தனைக்கு சிகிச்சையளிக்கின்றனர்; இருப்பினும், ஒருவரின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு பரந்த சிக்கல்களுக்கும் இது தீர்வு காணாது.